கர்நாடகா: பிறந்தது பெண் குழந்தை.. கையில் வந்ததோ இறந்த ஆண் குழந்தையின் சடலம்! என்ன நடந்தது?

கர்நாடகாவில் கர்ப்பிணியொருவரிடம் ‘உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது’ எனக்கூறப்பட்ட நிலையில், இறுதியில் அவரிடம் இறந்தநிலையில், ஆண் குழந்தையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கொப்பல்
கொப்பல்முகநூல்
Published on

கர்நாடகாவில் கர்ப்பிணியொருவரிடம் ‘உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது’ எனக்கூறப்பட்ட நிலையில், இறுதியில் அவரிடம் இறந்த நிலையில், ஆண் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்...

கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியை சேர்ந்தவர்கள் கனகப்பா மற்றும் கௌரி என்ற தம்பதியினர். கர்ப்பிணியான கௌரிக்கு கடந்த 23 தேதி, பிரசவ வலி ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செப்டம்பர் 25 ஆம் தேதி ‘பெண் குழந்தை பிறந்துள்ளது’ என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனகப்பா மற்றும் கௌரி தம்பதி
கனகப்பா மற்றும் கௌரி தம்பதி

கௌரியின் குழந்தை 7 மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், குறைந்த உடல் எடைக்காரணமாக, பிறந்தவுடனேயே குழந்தை பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை (NICU) பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் முகம் கூட பெற்றோரிடம் காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான், அக்டோபர் 2 ஆம் தேதி இவர்களின் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்போது குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் செவிலியர். குழந்தை இறந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்... தங்களின் கையில் இருப்பது ஆண் குழந்தை என்பதை கண்டவுடன் மீண்டும் அதிர்ச்சியில் மூழ்கினர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம், “எங்களுக்கு பிறந்தது பெண் குழந்தை என்றுதானே சொன்னீர்கள். மருத்துவச் சான்றிதழிலேயே பெண் குழந்தை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்க, ஆண் குழந்தையின் சடலத்தை கொடுத்துவிட்டு, எங்கள் குழந்தை இறந்துவிட்டது என்று எப்படி சொல்கின்றீர்கள்?” என்று கேட்டுள்ளனர்.

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தைபுதிய தலைமுறை

மேலும், “இது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை எனில், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படும்” என்று தம்பதியினர் தெரிவிக்கவே, “டிஎன்ஏ பரிசோதனை செய்து உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

கொப்பல்
திருச்சி: பட்டா பெயர் மாற்றம் செய்துதர ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது

இந்நிலையில், இது குறித்து மாவட்ட மருத்துவமனையின் பொறுப்பு இயக்குநர் டாக்டர் வேணுகோபால் கூறுகையில், “பிறப்பு பதிவேட்டில் பிறந்த குழந்தை ஆண் குழந்தை என்றுதான் உள்ளது. ஆனால், கே-ஷீட்டில் பெண் குழந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது. எதுவாகினும் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்படும். அதன்மூலம் உண்மை தெரியவந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பிரசவ நேரத்தில் கௌரியுடன் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்த மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ண ஓம்கர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இதுகுறித்தான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com