தனது வீட்டை 50 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய கர்நாடக அமைச்சர்

தனது வீட்டை 50 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய கர்நாடக அமைச்சர்
தனது வீட்டை 50 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றிய கர்நாடக அமைச்சர்
Published on

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை  50 படுக்கைகள் கொண்ட கோவிட் -19 பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார்.

கர்நாடகாவின் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் தவித்துவரும் சூழலில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹவேரி மாவட்டத்தின் ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார். ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள பசவராஜ் பொம்மையின் இல்லத்தில் அமைக்கப்பட்ட  இந்த மருத்துவமைய வளாகத்தில் இப்போது 50 நோயாளிகள் தங்க முடியும். நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களையும் அமைச்சர் நியமித்துள்ளார்.

" 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் படுக்கைகள் எனது வீட்டின் வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களின் குழு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்" என்று பசவராஜ் பொம்மை கூறினார். பொம்மை தனது குடும்பத்தினருடன் ஹுப்பல்லியில் தங்கியுள்ளார், அவர் தனது தொகுதிக்குச் செல்லும் போதெல்லாம் ஷிகான் குடியிருப்பைப் பயன்படுத்துவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com