கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் கொள்ளேகலா தாலுகாவில் உள்ள ஹோசமலங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி அபிலாஷ். இவர் சன்னப்பட்டினத்தைச் சேர்ந்த கிருத்திகாவை மணம் முடிக்க இருக்கிறார்.
சமீபகாலமாக நீர்வீழ்ச்சி, பாலம், ஆறு, புராதனச் சின்னங்கள் முன்பு ஆளில்லா விமானம் மூலம் pre wedding shoot ஐ பெரும்பாலானோர் நடத்துகிறார்கள். இந்நிலையில், இளம் விவசாயி அபிலாஷ், வித்தியாசமாக விவசாய நிலத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
ஏர் உழுதல், களி, கத்திரிக்காய் சாம்பாருடன் மதிய சாப்பாடு, தனது காதல் மனைவியுடனான மாட்டு வண்டி சவாரி என்று pre wedding shoot மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார் இளம் விவசாயி அபிலாஷ். இத்தோடு, தன் திருமண நாளில் விவசாயம் குறித்த சொற்பொழிவு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இப்போதெல்லாம், விவசாயியை திருமணம் செய்துகொள்ள பலரும் மறுக்கின்றனர் என்ற பேச்சு எழுந்து வரும் சூழலில், அபிலாஷ் என்ற இந்த இளம் விவசாயி, தன் திருமண அழைப்பையே விவசாயம் சார்ந்து வைத்துள்ளார். இவரது வித்தியாசமான முயற்சி பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், pre wedding shoot வீடியோவும் வைரலாகியுள்ளது.