கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின் தங்கியுள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின.
வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று எட்டு மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. பாஜகவும் அந்தக் கட்சியை தொடர்ந்து விரட்டி வருகிறது.
முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.