கர்நாடகாவில் 'கை' ஓங்குமா? 'தாமரை' மலருமா?: இன்று வாக்கு எண்ணிக்கை

கர்நாடகாவில் 'கை' ஓங்குமா? 'தாமரை' மலருமா?: இன்று வாக்கு எண்ணிக்கை
கர்நாடகாவில் 'கை' ஓங்குமா? 'தாமரை' மலருமா?: இன்று வாக்கு எண்ணிக்கை
Published on

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நண்பகல் 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், சராசரியாக 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2013ஆம் ஆண்டு பதிவான வாக்குகளைவிட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய 7‌‌5 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ்,‌ பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,612 வேட்பாளர்கள் 222 தொகுதிகளில் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அமையும் வகையில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் தெரியவந்துள்ளன.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நண்பகல் 12 மணிக்குள் வேட்பாளர்களின் வெற்றி தோல்வி தெரிந்துவிடும் என்பதால், கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு‌ அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com