பெகாசஸ் மூலம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் உளவுப் பார்ப்பு?

பெகாசஸ் மூலம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் உளவுப் பார்ப்பு?
பெகாசஸ் மூலம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் உளவுப் பார்ப்பு?
Published on

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் உளவுப் பார்க்க குறிவைக்கப்பட்டதாக THE WIRE இணையதளம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வரா, முன்னாள் முதலமைச்சர்களான ஹெச்.டி.குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகியோரின் தனிச் செயலளர்களின் செல்போன் எண்களும் பெகாசஸ் உளவு மென்பொருள் பட்டியலில் இருந்ததாக THE WIRE இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஜூலையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்த காலத்தில் இது நடந்திருக்கலாம் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, போராளிகளாக அறியப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் ரயில்வே யூனியன் தலைவர் பீலா பாட்டியா, தொழிலாளர்கள் உரிமை போராளி அஞ்சனி குமார் செல்போன் எண்களும் உளவுப் பார்க்கும் பட்டியலில் இருந்ததாக THE WIRE செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com