கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார்.
கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றது. இதனையடுத்து குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சிறிது நாட்களிலேயே அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கடந்த மாதம் 28-ஆம் தேதி தான் இந்த சந்திப்பு சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில் மீண்டும் பிரதமர் மோடியை குமாரசாமி இன்று சந்திக்க உள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்காக அவர் கர்நாடகாவிலிருந்து டெல்லி சென்றுள்ளார். பிரதமர் மோடி மட்டுமில்லாமல் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக குமாரசாமி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.