“பெரியார் செங்கோலை ஏற்கமுடியாது; ஆனால்...” மக்கள் சமூகநீதி பேரவைக்கு சித்தராமையா கொடுத்த விளக்கம்!

செங்கோல் சமூக நீதிக்கு எதிரானது எனக் கூறியதோடு, பெரியார் சிலையை மட்டும் கொடுத்தால் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
சித்தராமையா
சித்தராமையாPT Tesk
Published on

மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில்,

* கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது,

* முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றது

* பாடப் புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த வீரசாவர்க்கரின் வாழ்க்கை குறிப்புகளை கர்நாடக அரசு நீக்கியது,

* 75% இட ஒதுக்கீடை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தது

போன்றவற்றுக்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றுள்ளனர். இதற்காக அவரிடம் அனுமதி பெற்று கடந்த சனிக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள முதல்வரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

சித்தராமையா
சித்தராமையா

அப்போது முதல்வர் சித்தராமையாவிற்கு வாழ்த்து தெரிவிக்க தங்க முலாம் பூசிய 4 அடி உயரத்திலான பெரியார் உருவம் தாங்கிய சமூகநீதி செங்கோல் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அவர்கள் சென்றுள்ளனர்.

பெரியார் செங்கோல்
பெரியார் செங்கோல்

மக்கள் சமூகநீதி பேரவை நிர்வாகி மனோகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இந்த பெங்களூரு பயணத்தில் முதல்வர் சித்தராமையா இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது முதல்வர் சித்தராமையா, மக்கள் சமூகநீதி பேரவை அமைப்பினர் கொண்டு வந்த செங்கோலை பார்த்து, “பிரதமர் மோடிக்கு ஆதீனங்கள் செங்கோல் கொடுத்தபோது காங்கிரஸ் எதிர்த்தது. இப்போது நானே அதனை வாங்கினால் சரியாக இருக்காது. செங்கோல் என்பது சர்வாதிகாரத்திற்கு உரியது. சமூகநீதிக்கு எதிரானது. செங்கோல் பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே பெரியார் செங்கோலை பெற்றுக்கொள்ள முடியாது” எனக்கூறி தவிர்த்துள்ளார்.

சித்தராமையா
சித்தராமையா

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சமூகநீதி பேரவையினர், “மோடிக்கு வழங்கப்பட்ட செங்கோல் மதச்சார்புடையது. இது மதச்சார்பில்லாதது” என விளக்கம் அளித்தனர். இருப்பினும் அதனை முதல்வர் சித்தராமையா ஏற்கவில்லை.

சித்தராமையா
சித்தராமையா

தொடர்ந்து மக்கள் சமூகநீதி பேரவையினர் கொண்டு வந்திருந்த பெரியார் உருவம் தாங்கிய படங்கள் மற்றும் சால்வைகளை அவர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து முதல்வரிடம் மிகப்பெரிய அளவில் விழா நடத்தி செங்கோலை சமூகநீதி தூணாக மாற்றம் செய்து வழங்குவதாக தெரிவித்து மதுரை திரும்பி உள்ளனர் அப்பேரவையினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com