மேகதாது திட்டம் அமல்படுத்துவது உறுதி: கர்நாடக முதல்வர்

மேகதாது திட்டம் அமல்படுத்துவது உறுதி: கர்நாடக முதல்வர்
மேகதாது திட்டம் அமல்படுத்துவது உறுதி: கர்நாடக முதல்வர்
Published on

மேகதாது திட்டத்தை அமல்படுத்த அரசு உறுதியாக உள்ளதாக கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மேகதாது திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என சுயேட்சை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர், 9ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அணையை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், திட்டத்திற்கு காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திட்ட அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அதே போல மத்திய நீர் ஆணையம், சுற்றுச்சூழல், வனத்துறையின் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். திட்டத்தின் மூலம் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ள நிலையில், அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே மேகதாது திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மேகதாது முதல் பெங்களூரு வரை நடைபெறவுள்ள பாதயாத்திரை வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி தொடங்குவதாக, அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com