தண்ணீர் தட்டுப்பாடு | ‘ஹோலி கொண்டாட காவிரி நீர் கூடாது..’ - பெங்களூரு மக்களுக்கு அரசு வைத்த செக்!

ஹோலி பண்டிகைக்காக காவிரி நீரை பயன்படுத்த வேண்டாம் என பெங்களூரு மக்களுக்கு அம்மாநில குடிநீர் வடிகால் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஹோலி பண்டிகை - காவிரி நீர்
ஹோலி பண்டிகை - காவிரி நீர்puthiya thalaimurai
Published on

கோடைக்காலத்தையொட்டி பெங்களூரு நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் விதித்து வருகிறது.

ஹோலி பண்டிகை - காவிரி நீர்
“பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. செயற்கையா உருவாக்குறாங்க..” அருணாபாரதி

அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் ‘ஹோலி பண்டிகையின்போது காவிரி நீரை பயன்படுத்தி நீச்சல்குளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோலி கொண்டாட்டம்
ஹோலி கொண்டாட்டம்

மேலும் செயற்கை மழைபோல் குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பல்வேறு பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் விளக்கமளித்துள்ளது.

ஹோலி பண்டிகை - காவிரி நீர்
பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு... மாறி மாறி குற்றம்சாட்டும் கட்சிகள்! உண்மை என்ன?

அதேசமயம் ஹோலி பண்டிகைக்கான கலாசார நிகழ்ச்சிகளுக்கு எந்த தடையும் இல்லை என்பதை கூறியுள்ள கர்நாடக அரசு, தண்ணீர் பிரச்னைகளை சமாளிக்க அனைவரின் ஒத்துழைப்பும் முக்கியம் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com