சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஓடும் பைக்கில் சாகச காதலில் ஈடுபட்ட காதலர்கள். அந்த வீடியோ தப்போது வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல் பேட்டையில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் சாலையில் ஒரு காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென இளம்பெண் மோட்டார் சைக்கிளில் முன்பக்கம் அமர்ந்து தனது காதலனை பார்த்தவாறு அமர்ந்து அணைத்துக் கொண்டார்.
இதையடுத்து ஓடும் இருசக்கர வாகனத்திலேயே இருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலரும் பார்த்து முகம் சுளித்தனர். இருப்பினும் காதல் ஜோடி தங்களை மறந்து மோட்டார் சைக்கிளில் சில்மிஷத்தில் ஈடுபட்டுச் சென்றனர். இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தப்போது வைரலாக பரவி வருகிறது.
இதுபோன்ற சாகச காதலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இதுபற்றி விசாரணை மேற்கொண்ட சாம்ராஜ்நகர் மாவட்ட போலீசார், எச்டி கோட்டை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுவாமி என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்