கர்நாடகா: சாலையில் இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற பயணியை விரட்டிய காட்டுயானை

கர்நாடகா: சாலையில் இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற பயணியை விரட்டிய காட்டுயானை
கர்நாடகா: சாலையில் இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற பயணியை விரட்டிய காட்டுயானை
Published on

கர்நாடகா வனப்பகுதி சாலையில் இறங்கி அத்துமீறி புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணியை காட்டு யானை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ளது கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம். இந்த சாலையில் காட்டு யானைகள் அதிகமாக நடமாடுவதை காணமுடியும். இந்த நிலையில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானையை காரில் இருந்து இறங்கி புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணி ஒருவரை காட்டு யானை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காட்டு யானையால் துரத்தப்படும் நபர் நூலிழையில் உயிர் பிழைத்த காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. வனப்பகுதி சாலைகளில் இறங்கி அத்துமீற கூடாது என வனத்துறை எவ்வளவு அறிவுறுத்தியும் இதுபோன்ற நபர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதி சாலையில் அத்துமீறி யானையை புகைப்படம் எடுக்க முயன்ற அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com