கர்நாடகா: மாநகராட்சி விளையாட்டு மைதான இரும்பு கேட் விழுந்து 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

பெங்களூரு மாநகராட்சி விளையாட்டு மைதானத்தின் நுழைவுவாயில் இரும்பு கேட் விழுந்ததில், 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மைதான இரும்பு கேட்
மைதான இரும்பு கேட்pt desk
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூரு மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் - பிரியா தம்பதியர். விஜயகுமார் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் நிலையில், பிரியா, வீட்டு வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் நிரஞ்சன் என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.

சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்pt desk

இந்நிலையில், நேற்று மாலை நிரஞ்சன் தன் நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்துக்கு சென்றுள்ளார். அப்போது மைதானத்தின் நுழைவுவாயிலில் உள்ள இரும்பு கேட்டை பிடித்து இழுத்துள்ளார். அப்போது, கேட் நிரஞ்சன் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த நிரஞ்சனை அருகிலிருந்தவர்கள் மீட்டு இருசக்கர வாகனத்தில் மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மைதான இரும்பு கேட்
கோவை: வயிற்று வலிக்கு ஊசி போட்ட இளைஞர் சில மணி நேரத்தில் உயிரிழப்பு! என்ன நடந்தது?

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் நிரஞ்சன் பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com