கோயில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் பலியான விவகாரம்: மடாதிபதி உட்பட 4 பேர் கைது!

கோயில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் பலியான விவகாரம்: மடாதிபதி உட்பட 4 பேர் கைது!
கோயில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் பலியான விவகாரம்: மடாதிபதி உட்பட 4 பேர் கைது!
Published on

கர்நாடக மாநிலத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மடாதிபதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் மாவட்டத்தில் உள்ள சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற கோயில் உள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று, ராஜக் கோபுர கலசங்கள் நிறுவப்பட்டன. இதற்காக, வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில் கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

(தோடய்யா)

பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையில் கோயிலை புனரமைப்பதில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டதில், ஒரு தரப்பினர் பிரசாதத் தில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.அதில் பல திடுக் தகவல்கள் வெளியாயின. இந்தக் கோயிலுக்கு கோடி கணக்கில் வருமானம் வருகிறது. அதை ஒரு சிலர் மட்டுமே அனுபவத்து வந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட போட்டி காரணமாக ஒரு தரப்பை குற்றச்சாட்டுவதற்காக சிலர் இந்த செயலில் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பாக, கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி அம்பிகாவை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், மடத்தின் இளையமடாதிபதி இம்மாடி மகாதேவசாமி, கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற கூறியதால் பிரசாதத்தில் விஷம் கலக்க முடிவு செய்ததாக கூறினார். அதன்படி தோடய்யா என்பவரை விஷம் கலக்க ஏற்பாடு செய்தனர்.

இவர் பர்கூரைச் சேர்ந்தவர். கோயில் திருவிழா அன்று எல்லோரும் கோயிலில் இருக்க தோடய்யா, சமையல் செய்த இடத்துக்கு சென்று யாருக்கும் தெரியாமல் விஷத்தை கலந்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல சென்றுள்ளார்.

அம்பிகாவின் வாக்குமூலத்தை அடுத்து, மடாதிபதி மகாதேவசாமி, தோடய்யா, அம்பிகா, அவர் கணவர் கணவர் மாதேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com