உத்தர பிரதேசத்திலும் கன்வர் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தராகண்ட், உத்தர பிரதேச மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை காரணமாக, யாத்திரையை உத்தராகண்ட் அரசு ரத்து செய்தது. ஆனால், குறைந்த நபர்களுடன் 25ஆம் தேதி முதல் கன்வர் யாத்திரை நடத்த உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்திருந்தது.
கொரோனா காலத்தில் யாத்திரை நடத்துவதை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், கன்வர் யாத்திரையை ரத்து செய்வதாக நேற்றிரவு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்தார்.