பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து இந்தியை உடனே நீக்க வேண்டும் என கன்னட வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையமான, ‘நம்ம மெட்ரோ' நிலையத்தின் பெயர்ப்பலகையில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கன்னட வளர்ச்சி ஆணையம், முதலில் இந்தியை நீக்க வேண்டும் எனவும் அல்லது இந்தியாவின் 22 மொழிகளையும் அதில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தியை நீக்கிவிட்டு கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்கள் எழுதப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நம்ம மெட்ரோ பணிகளில் முழுவதும் கன்னடர்களையே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக முடிவு செய்ய கர்நாடக மெட்ரோ நிர்வாகம் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.