கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, கர்நாடகாவின் சிமோகா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சின் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். வரும் மே 7ஆம் தேதி சிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கீதாவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்துவரும் கன்னட நடிகரும் அவரது கணவருமான சிவராஜ் குமாரிடம் நமது செய்தியாளர் நடத்திய நேர்காணலை வரிவாக பார்க்கலாம்...
“காங்கிரஸ் கட்சி என்றில்லை எங்களுக்கு நிறைய தெரிஞ்சவங்க இருக்குறாங்க. மது மச்சான், வேணுகோபால் கிருஷ்ணா ரொம்ப வருசமா தெரிஞ்சவரு. அதேபோல தெரிஞ்சவங்க எல்லாம் ஒருநாள் வர முடியுமா? ஒருநாள் வர முடியுமான்னு கேட்டபோது. சரி அவங்களுக்கு அது ஆதரவாக இருக்கும்னு போனேன். நான் எது பேசுனாலும் வேற பார்ட்டி மெம்பர்களைப் பற்றி பேசமாட்டேன்”
“என்னோட ரசிகர்களுக்கு நான் என்ன சொல்றேன்னா, நான் யாரையும் ‘இந்த பார்ட்டிக்கு வாங்க அந்த பார்ட்டிக்கு போங்க’ன்னு சொல்லமாட்டேன். அது அவங்க இஷ்டம். அவங்க விருப்பத்தை நான் கெடுக்க மாட்டேன். அதே மாதிரி என்னோட விருப்பத்துக்கு தயவு செய்து வராதீங்க. சினிமா வேற அரசியல் வேற. அரசியல்ல, உங்க ஆசைகள் வேற என்னோட ஆசைகள் வேற.
சினிமா என்று வரும்போது உங்களோட ஆசையை நிறைவேற்றுவது என்னோட கடமை. அதுவே அரசியல் என வரும் போது ரசிகர்கள் என்ன விரும்புறாங்களோ அதுக்கு போகலாம். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.
என்னோட மனைவி கீதா, கடந்த பத்து வருஷத்துக்கு முன்பாடி எம்பி எலெக்ஷன்ல நின்னாங்க. அப்ப வெற்றி பெறல. அவங்களுக்கு அரசியல் ரொம்ப பிடிக்கிது. அந்தப் பிடிப்பு எனக்கு ரொம்ப பிடிச்சது. அவங்களோட நோக்கம் ரொம்ப நல்லா இருக்குது. அதனால ஆதரவு தரேன்.
என்னோட ரெண்டு பொண்ணுக கூட இப்போ வளர்ந்திருக்காங்க. ஒருத்தர் தயாரிப்பாளரா இருக்காங்க. ஒருத்தர் டாக்டரா இருக்காங்க. அவங்கவங்க கால்ல நிக்கிறாங்க. என்னோட தொழிலும் நல்லா இருக்கு. மனைவியும் தயாரிப்பாளரா இருக்காங்க.
“சிமோக மக்களுக்க உங்க குடும்பத்தில் சார்பாக என்ன கேரண்டி கொடுக்குறீங்க?”
“முதன் முதலில் அரசியலுக்கு வர்றவங்ககிட்ட இத கேட்டிருந்தா ரொம்ப கஷ்டம். எல்லோரும் வாய்ப்பு கொடுப்பது போல் என்னோட மனைவிக்கும் வாய்ப்பு கொடுங்க. அவங்க பண்ணுவாங்க. அரசாங்கம் கேரண்டி கொடுத்திருக்கு.
இருந்தாலும் நான் ஒரேயொரு கேரண்டி தருவேன் மக்களுக்கு. அது என்னன்னா, நான்தான். ஆமா, கேரண்டியே நான்தான் அவங்களுக்கு!” என்றார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அவரது முழு பேட்டியின் வீடியோவை பார்க்கலாம்.