ரசிகர் கொலை வழக்கு | தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்.. கண்டிஷன் போட்ட கர்நாடக நீதிமன்றம்!

நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்எக்ஸ் தளம்
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு (சிறைச்சாலையில்) தர்ஷன் மூவருடன் சுற்றித் திரிந்த படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து மாற்றப்பட்டார். இந்த நிலையில், நடிகர் தர்ஷனுக்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்த இருதரப்பு விசாரணைகளின் முடிவில், நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷன்
கன்னட நடிகர் தர்ஷன்

நீதிபதி தனது உத்தரவில், “தர்ஷன் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மேலும் ஏழு நாட்களுக்குள் அவர் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் தர்ஷன்
சிறையில் புகைபிடிக்கும் நடிகர் தர்ஷன் போட்டோ! சிறப்பு சலுகையா? விசாரணையில் 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

முன்னதாக, இவருடைய இடைக்கால ஜாமீனுக்கு அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். “தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

நடிகர் தர்ஷன் தரப்பு வழக்கறிஞரோ, “உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவர், சாட்சிகளை அழிக்க முயற்சிக்க மாட்டார். எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இதையும் படிக்க: IPL 2025: உறுதியான தோனி..? தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் யார்? எமோஜிகளால் சஸ்பென்ஸ் வைத்த CSK!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com