காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். 100 நாட்களை கடந்து ராகுல்காந்தி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அரியானாவில் அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங், மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங், குமாரி செல்ஜா உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். அதேபோல் ராகுல் காந்தியுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கலந்துகொண்டு நடந்து சென்றார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பது குறித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒற்றுமைப் பேரணியில், ஒரு கட்சியின் தலைவராக அல்லாமல் சக குடிமகனாக பங்கேற்குமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இதைக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு - தேசத்துக்கான நடைப்பயணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ராகுலின் நடைபயணத்தில் தானும் பங்கேற்க உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் திரு.@RahulGandhi அவர்களின் அழைப்பையேற்று நாளை திச-24 அன்று புது தில்லியில் அவருடன் நானும் தோழர் @WriterRavikumar அவர்களும் பங்கேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த
நூறு நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும்
திரு.@RahulGandhi அவர்களின் அழைப்பையேற்று நாளை திச-24 அன்று புது தில்லியில் அவருடன் நானும்
தோழர் @WriterRavikumar அவர்களும் பங்கேற்கிறோம். #BharatJodoYatra #VCK pic.twitter.com/LmqBhx2wuU
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 23, 2022