”ஆதார் இருந்தால் என்னைச் சந்திக்கலாம்”-தொகுதி மக்களுக்கு நிபந்தனை விதித்த கங்கனா! எதிர்க்கும் காங்.!

தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால், ஆதார் அட்டையுடன் வருமாறு பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்எக்ஸ் தளம்
Published on

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இதையடுத்து, மண்டி தொகுதி எம்பியாகவும் மக்களவையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், ”தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால், ஆதார் அட்டையுடன் வர வேண்டும்” கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்ட்விட்டர்

மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, "நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை. இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய மாநிலம். எனவே, எனது தொகுதி மக்கள் சிரமத்தைச் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே ஆதார் அட்டையுடன் வரவேண்டும் எனக் கூறுகிறேன்.

மேலும், என்னைச் சந்திப்பதற்கான காரணத்தையும், தொகுதிகளின் பிரச்னைகளையும் காகிதத்தில் எழுதி வரும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் சாமானிய தொகுதி மக்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதற்காகவே இந்த முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!

கங்கனா ரனாவத்
கங்கனா கன்னத்தில் அறைந்த விவகாரம்| சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்! எங்கு தெரியுமா?

தொகுதி மக்களுக்கு இப்படி கட்டளை பிறப்பித்திருப்பதால் கங்கனா ரனாவத் எதிராக கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து கங்கனாவை எதிர்த்துப் போட்டியிட்ட தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங், “கங்கனா ஒரு மக்கள் பிரதிநிதி. எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது அவரது பொறுப்பு.

எந்தவித பணியாக இருந்தாலும் சரி அல்லது கொள்கை விஷயம், தனிப்பட்ட வேலை என எதுவாக இருந்தாலும் மக்கள் அவரை எந்தவித அடையாளமும் இல்லாமல் சந்திக்கலாம். தன்னைச் சந்திக்க வரும் மக்களை குறிப்பிட்டு ஆவணங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே சந்திப்பேன் எனக் கூறுவது சரியல்ல” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து வெளிநாட்டில் குடியேறும் இந்தியர்கள்; குஜராத் மாநிலத்தின் நிலை என்ன?

கங்கனா ரனாவத்
கன்னத்தில் அறைந்த விவகாரம்| பெண் காவலருக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள்.. சாடிய கங்கனா ரனாவத்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com