ராகுல் காந்தியைக் களங்கப்படுத்தி புகைப்படம் வெளியீடு.. தொடர் சர்ச்சையில் சிக்கும் கங்கனா ரனாவத்!

ராகுல் காந்தியைக் களங்கப்படுத்தி புகைப்படம் வெளியிட்ட பாஜக எம்பி கங்கனா ரனாவத் மீது ரூ.40 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கங்கனா ரனாவத், ராகுல் காந்தி
கங்கனா ரனாவத், ராகுல் காந்திஎக்ஸ் தளம்
Published on

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். இவர், வேட்பாளராக நிறுத்தப்பட்டது முதலே சர்ச்சை செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பெண் காவலர் ஒருவர் அவரை அறைந்தது முதல் தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால், ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என நிபந்தனை விதித்ததுவரை அவரைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் சுழன்று வருகின்றன. இந்த நிலையில், அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சியும் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை, தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கங்கனாவின் இன்ஸ்டா பதிவு
கங்கனாவின் இன்ஸ்டா பதிவு

அவருடைய இன்ஸ்டா பக்கத்தில், தலையில் குல்லா, கழுத்தில் சிலுவை மற்றும் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தபடி ராகுல் காந்தி இருப்பதுபோன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, அதற்கு கீழே ‘யாருடைய சாதியையும் கேட்காமல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த விரும்புபவர்’ எனப் பதிவிட்டிருந்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “அவர் மீதும் தவறு இருக்கிறது”- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து சாய்னா நேவால்

கங்கனா ரனாவத், ராகுல் காந்தி
”ஆதார் இருந்தால் என்னைச் சந்திக்கலாம்”-தொகுதி மக்களுக்கு நிபந்தனை விதித்த கங்கனா! எதிர்க்கும் காங்.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பற்றி பேசியபோது ராகுல் காந்தியின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கங்கனா ரனாவத் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

கங்கனா ரனாவத், ராகுல் காந்தி
ராகுலின் சாதி குறித்த விமர்சனம் | அனுராக் தாக்கூர் பேச்சுக்கு எதிராக அமளி.. அவை ஒத்திவைப்பு!

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளார். தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி ஒருவருடைய புகைப்படத்தை மார்பிங் செய்து அவருடைய அனுமதி இல்லாமல் இணையத்தில் பரப்புவது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ள மிஷ்ரா, ராகுல் காந்தி மீது களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி கங்கனா மீது ரூ.40 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, “ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரைப் பற்றி ராகுல் காந்தி பேசுவது தவறான முன்னுதாரணமாகும். ராகுல் காந்தி இப்படி பேசுவதை பார்க்கும்போது மது அல்லது போதைப் பொருளை பயன்படுத்தியவாறு நாடாளுமன்றத்துக்குள் வருகிறாரா என்று அவரை சோதனை செய்ய வேண்டும்” என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க: ஒலிம்பிக் கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்தாரா அன்டிம் பங்காலின் சகோதரி? உண்மையில் நடந்தது என்ன?

கங்கனா ரனாவத், ராகுல் காந்தி
கங்கனா கன்னத்தில் அறைந்த விவகாரம்| சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்! எங்கு தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com