விவசாயிகள் போராட்டம்: தொடர் சர்ச்சையில் சிக்கும் கங்கனா ரனாவத்... கண்டனம் தெரிவித்த பாஜக தலைமை!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜக எம்பி கங்கனா ரனாவத் பேசிய கருத்துக்கு, அக்கட்சியே கண்டனம் தெரிவித்துள்ளது.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்ட்விட்டர்
Published on

இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி வருகிறார். அந்த வகையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத், “மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்எக்ஸ் தளம்

இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மோடி அரசு, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு வெளிநாட்டு சதிகள்தான் காரணம்” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: சிக்னல் இல்லை.. சவூதி பாலைவனத்தில் வழிதவறிப் போன இந்திய நபர்.. நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

கங்கனா ரனாவத்
கங்கனா கன்னத்தில் அறைந்த விவகாரம்| சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்! எங்கு தெரியுமா?

அவருடைய இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பாஜகவே கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஹர்ஜித் கரேவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா பேச வேண்டிய அவசியமில்லை. அது, அவரது தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகளின் நண்பர்கள். பிரதமர் மோடியின் பாஜக அரசு, விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்புகளை முன்னெடுத்திருக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராகச் செயல்படுகின்றன. கங்கனாவின் அறிக்கையும் அதைத்தான் செய்கிறது. எனவே, கங்கனா ரனாவத் மதம் சார்ந்த அமைப்பு மற்றும் மிக முக்கிய விவகாரங்களில் அவர் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது” என எச்சரித்துள்ளார்.

கங்கனா ரனாவத், ராகுல் காந்தி
கங்கனா ரனாவத், ராகுல் காந்திஎக்ஸ் தளம்

முன்னதாக, “ஆதார் கார்டு தொகுதி மக்கள் என்ன்னைச் சந்திக்கலாம்” என கங்கனா ரனாவத் தெரிவித்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில், தலையில் குல்லா, கழுத்தில் சிலுவை மற்றும் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தபடி ராகுல் காந்தி இருப்பதுபோன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, அதற்கு கீழே ‘யாருடைய சாதியையும் கேட்காமல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த விரும்புபவர்’ என பதிவிட்டிருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதற்குப் பிறகு, “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுக்கரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால், இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: ”எந்த வேலையும் இல்லை.. ஆனா, சம்பளம் ரூ.3 கோடி” - விமர்சனத்திற்கு உள்ளான அமேசான் ஊழியரின் பதிவு!

கங்கனா ரனாவத்
ராகுல் காந்தியைக் களங்கப்படுத்தி புகைப்படம் வெளியீடு.. தொடர் சர்ச்சையில் சிக்கும் கங்கனா ரனாவத்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com