பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் - கர்நாடகாவில் அதிர்ச்சி

பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் - கர்நாடகாவில் அதிர்ச்சி
பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் - கர்நாடகாவில் அதிர்ச்சி
Published on

கர்நாடகாவில் பள்ளி மாணவர்களின் பைகளிலிருந்து ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், லைட்டர்கள், சிகரெட்டுகள் மற்றும் ஒயிட்னர்களை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்தது நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதை தடுக்க, KAMS(கர்நாடகா பள்ளி மேலாண்மைகள்) மாணவர்களில் புத்தகப்பைகளில் சோதனை மேற்கொண்டனர் ஆசிரியர்கள். குறிப்பாக 8. 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளை சோதனையிட்டதில் ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், லைட்டர்கள் மற்றும் சிகரெட்டுகளை கண்டுபிடித்த அதிகாரிகள், மாணவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கு பதிலாக, அவர்களின் எதிர்காலம் மற்றும் நிலைமை மோசமாவதை கருத்தில்கொண்டு, பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் மாணவர்களுக்கு போதிய மருத்துவ அறிவுரை வழங்கவும் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

KAMS பொதுச் செயலாளர் டி ஷாஷி குமார் கூறுகையில், “ஒரு மாணவனின் பையில் வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் பாட்டில்களில் ஆல்கஹால் இருந்ததும் தெரியவந்தது” என்று கூறியுள்ளார். இதனையடுத்து பெங்களூருவிலுள்ள சில பள்ளிகள் பெற்றோர் - ஆசிரியர் மீட்டிங் வைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் எந்த அளவிற்கு அதிர்ச்சியடைந்தனரோ அதே அளவிற்கு பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகளின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

“பள்ளிகளில் மாணவர்களுக்கு எங்கள் தரப்பிலிருந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக 10 நாட்கள் வரையும் மாணவர்களுக்கு விடுப்பு வழங்கவும் முடிவெடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார் நகரபாவி பள்ளி பிரின்சிபல்.

மற்றொரு பள்ளி பிரின்சிபல் கூறுகையில், பரிசோதனையின்போது மற்றொரு 10ஆம் வகுப்பு மாணவியின் பையிலிருந்து காண்டம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, தன்னுடன் டியூஷன் வருகிற சக மாணவிகள் மீது குற்றஞ்சாட்டினார் என்று கூறியுள்ளார். பெங்களூருவிலுள்ள கிட்டத்தட்ட 80% பள்ளிகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக KAMS பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பைகளை பரிசோதனை செய்ய KAMS முடிவெடுத்தது ஏன்?

கடந்த சில நாட்களாக மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவதையும், தகாத வார்த்தைகளால் திட்டுவதையும் வாடிக்கையாக்கியுள்ளனர். மேலும் அவர்களது நடத்தைகளில் கவனிக்கத்தக்க மாற்றம் இருந்ததையும் கண்டறிந்தனர். 5ஆம் வகுப்பு மாணவர்கள் கூட இதுபோல் நடந்துகொள்வதை கவனித்த அதிகாரிகள் இதுபோன்ற தகாத நடத்தைகளுக்கான காரணத்தை கண்டறியவே பரிசோதனை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் பொருட்கள் கிடைத்துள்ளன. இது ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com