நேற்று ஆம் ஆத்மியில் இருந்து விலகல்.. இன்று பாஜகவில் இணைவு.. கைலாஷ் கெலோட் சொல்லும் காரணம் என்ன?

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சருமாகவும் இருந்த கைலாஷ் கெலோட் நேற்று பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட்
பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட்pt web
Published on

ஆம் ஆத்மியில் இருந்து நேற்று விலகிய கைலாஷ் கெலாட்!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராஜினாமா கடிதம் எழுதிய கைலாஷ் கெலாட், கட்சி அண்மைக் காலமாக சந்தித்து வரும் விமர்சனங்கள் குறித்தும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தார். அதில் மேலும், டெல்லி மக்களின் பிரச்னைகளுக்கு போராடுவதற்கு பதிலாக தனது நலன் கருதியே ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருவதாகவும் கைலாஷ் கெலோட் குற்றம்சாட்டியிருந்தார்.

கைலாஷ் கெலாட் ராஜினாமாவின் பின்னணி என்ன? ஆம் ஆத்மி வட்டாரம் சொல்லும் தகவல்!

முன்னதாக மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதும் அவரது துறைகள் சௌரப் பரத்வாஜ் மற்றும் தற்போதைய டெல்லி முதலமைச்சர் அதிஷிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. மனீஷ் சிசோடியாவிடம் 18 துறைகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், கைலாஷ் கெலாட்டிடம் இருந்து சட்டம் மற்றும் நீதித்துறையும் பறிக்கப்பட்டு அதிஷிக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதிஷி முதல்வரானதும் கைலாஷுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இவையாவுமே கைலாஷ் கெலாட்டின் ராஜினாமா முடிவுக்கான காரணம் என ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட்
வியட்நாம்: 1000 Babies சீரிஸ் போல மாற்றிவைக்கப்பட்ட குழந்தைகள்? DNA சோதனையில் தெரியவந்த பகீர் உண்மை!

ஆம் ஆத்மி அரசாங்கத்தில் இருந்து விலகிய இரண்டாவது அமைச்சர் கைலாஷ் கெலோட். முன்னதாக, ஏப்ரல் 10 ஆம் தேதி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்

டெல்லியில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கைலாஷ் கெலோட்டின் விலகல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. மாற்றுக் கட்சியில் அவர் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட்
“இந்தியாவில் ஒரு மைக்ரோசாஃப்டோ ஆப்பிளோ ஏன் உருவாக முடியாது?” ஐஐடி விருதுக்குப் பின் ARR பேச்சு

பாஜக-வில் இருந்த கைலாஷ் கெலோட்!

இந்நிலையில், கைலாஷ் கெலோட் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. பாஜகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து ஆம் ஆத்மியில் இருக்கும் எனக்கு ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைவது என்பது எளிமையான முடிவல்ல. அமலாக்கத்துறை, சிபிஐ சோதனைகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு நான் பாஜகவில் இணைந்ததாக ஒரு வாதம் முன்வைக்கப்படுவதை முற்றிலும் மறுக்கிறேன்.

மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதற்காகவே நான் ஆம் ஆத்மியில் இணைந்தேன். ஆனால், கொள்கைகளில் இருந்து ஆம் ஆத்மி விலகி விட்டது. இதுவே ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சேர என்னை தூண்டியது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com