மேற்கு வங்காள நிலக்கடலை விற்பனையாளரான பூபன் பத்யாகருக்கு 'கச்சா பாதாம்' என்ற பாடலுக்காக கோதுலிபெலா மியூசிக் Godhulibela என்ற நிறுவனத்திடமிருந்து 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
கச்சாபாதம் என்ற பாடல் இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் வைரலான பாடல். இந்த பாடலை பலரும் தங்களுக்கு தகுந்தாற்போல ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். இன்று பலரும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்தாலும் இதற்கெல்லாம் விதை போட்டது நிலக்கடலை விற்பனையாளரான பூபன் பத்யாகர் தான். பாடலின் படைப்பாளரான அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். கச்சா பாதம் பாடல் ஹிட் ஆனபோதிலும், அவருக்கான நிதி நிலை மாறவில்லை என்ற குற்றச்சாட்டை பலர் முன்வைத்தனர்.
''இன்று பூபன் பத்யாகருடன் 3 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தோம், அவருக்கு காசோலையாக 1.5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. மீதித் தொகை அடுத்த வாரம் அவருக்கு வழங்கப்படும்”என்று கோதுலிபேலா நிறுவனத்தைச் சேர்ந்த கோபால் கோஸ் இந்தியா டுடேவிடம் கூறினார். Godhulibela Music தான் அவருடைய பாடலை முதன்முதலாக ரீமிக்ஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.