உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் என்.வி.ரமணாவிற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப்பிராமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். வரும் திங்கட் கிழமை முதல் கொரோனா வைரஸ் தொடர்பான வழக்குகளுக்கு என்.வி.ரமணா தீர்வு காண உள்ளார்.
முன்னதாக , உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக, சரத் அரவிந்த் பாப்டே, நேற்று ஓய்வு பெற்ற நிலையில் 48 ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.