நீதிபதி கே.எம் ஜோசப்பின் சீனியாரிட்டி குறைக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் மூத்த நீதிபதிகள் முறையிட்டனர்.
நீதிபதிகளை பரிந்துரைக்கும் கொலீஜியம் அமைப்பில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நேரில் சந்தித்தனர். அப்போது, உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜோசப்பின் பெயர் 6 மாதங்களுக்கு முன்பே கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு அறிவிக்கையில் அவரது பெயர் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உறுதியளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், ஜோசப் ஆகியோர் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஏற்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அவர்கள் இன்று பதவியேற்றும் நிலையில், பணி மூப்பு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.