தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!

தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!
தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!
Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொடுத்துள்ளார்கள். 

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்ட சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி தான் லோயா. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி அன்று திருமண நிகழ்ச்சியில் ஒன்றில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரின் மரணத்தில் பலரும் சந்தேகம் இருப்பதாக கூறினர். அத்துடன் லோயாவின் மரணம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பலரும் மனுக்கள் செய்திருந்தனர். 

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் லோயா வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு கோரிய மனுக்களுக்கு, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், லோயா வழக்கிற்கு சிறப்பு விசாரணைக்குழு தேவையில்லை எனக் கூறிய நீதிபதிகள் மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும் லோயாவின் மரணம் இயற்கையானது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதி லோயா வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த மறுநாளே எதிர்க் கட்சிகளான  இடது சாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டன. பின்பு, வெங்கய்யா நாயுடுவிடம் தீர்மானக் கடித்ததை கொடுத்தார் குலாப் நபி ஆசாத். அதில் தீபக் மிஸ்ராவை தலைமை நீதிபதி பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு 6 கட்சிகளை சேர்ந்த 64 மாநிலங்களை உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com