ஜோ பைடன் நிர்வாகத்தில் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்திய பெண் நியமனம்

ஜோ பைடன் நிர்வாகத்தில் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்திய பெண் நியமனம்
ஜோ பைடன் நிர்வாகத்தில் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்திய பெண்  நியமனம்
Published on

ஜோ பைடன், அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தாவை நியமிக்கவுள்ளார்.

அமெரிக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், நாட்டின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தாவை தேர்வு செய்யவுள்ளார், நாட்டின் உயர்ந்த பதவிகளின் ஒன்றான இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் இவராவார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில், பைடன் துணைத் தலைவராக இருந்தபோது வனிதாகுப்தா முதன்மை துணை உதவி அட்டர்னி ஜெனரலாகவும், நீதித்துறையில் சிவில் உரிமைகள் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு முடித்தவுடனே வனிதா குப்தா, டெக்சாஸ் நகரத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்ட 38 பேர் விடுவிக்க வாதாடி வெற்றிபெற்றார், இதில் பெரும்பாலோர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். அவர்களுக்கு இழப்பீடாக 6 மில்லியன் டாலரும் கிடைத்தது, இந்த வழக்கினால் வனிதா குப்தா புகழ்பெற்ற நபரானார். குப்தா மிகப்பெரிய மனித உரிமை அமைப்பான அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியனின் வழக்கறிஞராக பணிபுரிந்தார், அங்கு அவர் புலம்பெயர்ந்தோர் மற்றும் வெகுஜன கைதுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வழக்குகளை நடத்தி வென்றார். அவர் இப்போது 200 க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் இணைந்து நடத்தும் சிவில் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தலைமைத்துவ மாநாட்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com