ஜம்மு காஷ்மீர் | கிஷ்த்வாரில் பயங்கரவாத தாக்குதல்.. ராணுவ வீரர் ஒருவர் மரணம், 3 பேர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்த்வாரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இறந்த ராணுவ வீரர்
இறந்த ராணுவ வீரர்எக்ஸ் வலைதளம்
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்த்வாரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. கந்தர்பால் மாவட்டத்தில் ககாங்கிர் பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு திட்ட நிறுவனத்தின் தொழிலாளர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் அக்டோபர் 20 அன்று தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் 24 அன்று, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கின் போடாபத்ரி பகுதியில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இப்படி ஆங்காங்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாடுகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்ற நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் திரும்பி வராத நிலையில் அவர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோரின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பயங்கரவாதிகளை ராணுவத்தினர் தேடி வந்தனர்.

அதன்படி சனிக்கிழமை நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், கிஷ்த்வாரின் பார்ட் ரிட்ஜில் தொடங்கப்பட்ட கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஜூனியர் கமிஷண்ட் அதிகாரி நைப் சுபேதார் ராகேஷ் குமார் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் 16 கார்ப்ஸ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com