நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி ஜார்கண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியான முக்தி மோட்சா கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஹேமந்த் சோரன் பங்கெடுத்தார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, தனது பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவரும், ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவருமாக அறியப்படும் அமைச்சர் சம்பாய் சோரன், 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன், ஆளுநர் சி. பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமைகோரியபின், தற்காலிக முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்தார்.
இந்நிலையில் ஆளுநர் ஆளும் கட்சி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்த 10 நாட்களில் நடத்துவதற்கு உத்திரவிட்டிருந்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்க சில முயற்சிகளையும் மேற்கொண்டது. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் ரஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுதியாக நின்று
இந்நிலையில், இன்று சம்பாய் சோரன் முதலமைச்சராக நீடிப்பதற்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதில், 47 எம் எல் ஏக்களின் ஆதரவைப் பெற்று தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார். இதில் முதல்வர் பதவியை ராஜினமா செய்த முன்னாள் முதல்வர் ஹேமந்த சோரனும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு வாக்களித்துள்ளார். இதன்படி மீண்டும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியான முக்தி மோட்சா கட்சியானது சம்பாய் சோரன் தலைமையில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் பேசிய சாம்பாய் சோரன், தங்களது ஒற்றுமையை குலைப்பதற்கு நடைபெற்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தன்னுடைய ஆட்சி ஹேமந்த் சோரன் ஆட்சியின் இரண்டாம் பாகம் என்று தெரிவித்தார்.
அதேபோல், சட்டசபையில் பேசிய ஹேமந்த் சோரன் பாஜகவின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ”காடுகளில் இருந்து வெளிவந்து தங்களுக்கு சரிக்கு சமமாய் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். எனக்கு எதிராக சாட்சிகள் இருந்து நிரூபித்து காட்டுங்கள், அரசியலை விட்டே விலகுகிறேன்” என்று அவர் பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின்னர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.