ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 65 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், அவை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவித்திருந்தன.
அதன்படியே, வாக்கு எண்ணிக்கையில் பாஜகவிற்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையான நிலையில் காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக 79 இடங்களில் போட்டியிட்ட பாஜக 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஜேவிஎம் 4 இடங்களிலும், ஏஜேஎஸ்யூ 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்றவை 3 இடங்களில் முன்னிலை கண்டுள்ளன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.