ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் கைதாகியுள்ளார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான அவர் INDIA கூட்டணியில் உள்ளார்.
நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைதாகியுள்ளார். இதனையடுத்து, ஜார்க்கண்ட் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரான சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பாய் சோரன் தேர்வாகியுள்ளார்.