ஜார்க்கண்ட்|பாஜகவில் இணைந்த EX முதல்வருக்கு சீட்.. 68 இடங்களில் நேரடி போட்டி.. ஆளும் கட்சிக்கு டஃப்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
சம்பாய் சோரன், பாபுலால் மராண்டி
சம்பாய் சோரன், பாபுலால் மராண்டிஎக்ஸ் தளம்
Published on

ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் 

ஜார்க்கண்ட்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஹேமந்த் சோரன் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தின் 81 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட 5 ஆண்டு பதவிக்காலம் 2025 ஜனவரி 5-ல் முடிவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடிவுசெய்த தேர்தல் ஆணையம், அதற்கான தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி 43 தொகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கூட்டணி அம்மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் 70 தொகுதிகளில் போட்டியிடும் எனவும், இதர உள்ள 11 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கப்படும் என ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

அவர் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, பாஜக 66 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது. இதில் மூத்த தலைவர் பாபுலால் மராண்டி, முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், ஹேமந்த் சோரனின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரேநாளில் 11.. ஒரு வாரத்தில் 50.. தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களால் பாதிக்கப்படும் விமானங்கள்!

சம்பாய் சோரன், பாபுலால் மராண்டி
மகாராஷ்டிரா - ஒரே கட்டம், ஜார்க்கண்ட் - இரு கட்டம் | சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

68 இடங்களில் நேரடி போட்டி!

81 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் 10 இடங்களிலும் ஜனதா தளம் (யு) 2 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.

ஜார்க்கண்ட் பாஜக தலைவரான பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைகெல்லா தொகுதியிலும், அவரது மகன் பாபுலால் சோரன் காட்ஷிலா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஹேமந்த் சோரனின் மைத்துனர் சீதா சோரன், ஜம்தாரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஜெகநாத்பூரைச் சேர்ந்த கீதா கோடா மற்றும் கும்லாவில் இருந்து போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன் பகத் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன.

பாஜகவில் இணைந்த சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதிருப்தியில் இருந்த சம்பாய் சோரன், புதிய கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், பின்னர் அது கைவிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். தற்போது அவருக்கும் பாஜக போட்டியிட சீட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” - மகனுக்கு ஆதரவாக பேசிய தந்தை!

சம்பாய் சோரன், பாபுலால் மராண்டி
பாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்.. இணைந்தது ஏன்? யார் இந்த சம்பாய் சோரன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com