உணவு இல்லை எனச் சொன்ன வீரர் குடிகாரர்... பாதுகாப்பு படை விளக்கம்

உணவு இல்லை எனச் சொன்ன வீரர் குடிகாரர்... பாதுகாப்பு படை விளக்கம்
உணவு இல்லை எனச் சொன்ன வீரர் குடிகாரர்... பாதுகாப்பு படை விளக்கம்
Published on

எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமான உணவு கூட வழங்கப்படுவதில்லை என்று வீரர் ஒருவர் சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்த நிலையில், அவர் குடிப்பழக்கம் உடையவர் என எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் 29-வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் தேஜ் பகதூர் யாதவ். இவர் ராணுவ வீரர்கள் போதிய உணவின்றி தவிப்பதாக வீடியோக்களை இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார். தினமும் 11 மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச் செல்கிறோம். எங்களின் அவல நிலை யாருக்கு தெரியாமல் உள்ளது என அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை விளக்கம் தெரிவித்துள்ளது. அதில் தேஷ் பகதூர் நாள்பட்ட குடிப்பழக்கம் கொண்டவர் எனவும் வழக்கமாகவே குற்றம் செய்யக் கூடியவர் எனவும் கூறப்பட்டுள்ளது. குடிப் பழக்கம் காரணமாக அதிகாரிகளுடன் அவர் தவறாக நடந்து கொள்வதால், சில மேலதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்ததாகவும் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com