ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

83 வயதான அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அவரது மகன் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார். முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

“அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகளும் இருக்கின்றன. நான் உட்பட எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எங்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்” என உமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார். 

கடந்த சில தினங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரேநாளில் 56,211 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த3 நாட்களாக 60 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் இன்று 56,211 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com