மாநில அந்தஸ்து கோரும் புதிய முதல்வர் உமர் அப்துல்லா.. ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவையில் இணையாத காங்கிரஸ்!

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரின் முதல் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள உமர் அப்துல்லா, ”விரைவில் ஜம்மு -காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
உமர் அப்துல்லா, ராகுல், பிரியங்கா
உமர் அப்துல்லா, ராகுல், பிரியங்காஎக்ஸ் தளம்
Published on

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரின் முதல் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள உமர் அப்துல்லா, ”விரைவில் ஜம்மு -காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். ”இதற்காக ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்” என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். 2019ஆம் வருடத்தில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர், யூனியன் பிரதேச அந்தஸ்துக்கு மாற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என வலியுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், எப்போது மாநில அந்தஸ்து ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். ஆகவே, ஜம்மு -காஷ்மீர் சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்த புதிய ஜம்மு-காஷ்மீர் அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: பாபாசித்திக் படுகொலை| சல்மான்கானுக்கு மிரட்டல்.. மிகப்பெரிய நெட்வொர்க்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

உமர் அப்துல்லா, ராகுல், பிரியங்கா
ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்றார் உமர் அப்துல்லா..

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இன்று (அக்.16) உமர் அப்துல்லா மற்றும் புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இணையவில்லை. காங்கிரஸ் கட்சி இரண்டு அமைச்சர் பதவிகளைக் கேட்டதாகவும் ஆனால் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான உமர் அப்துல்லா அமைச்சரவையில் ஓர் இடம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வழங்க முடியும் என தெரிவித்துவிட்டதாக ஸ்ரீநகரில் உள்ள அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே உமர் அப்துல்லாவுடன் பதவியேற்றனர். ஜம்மு பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் சௌத்ரிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜாவேத் ராணா, ஷகினா இட்டோ, சதீஷ் சர்மா மற்றும் ஜாவேத் தர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதுவே, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் அமைச்சரவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய்| உயிரிழந்ததாகப் பரவிய தகவல்.. மும்பை போலீஸ் சொல்லும் உண்மை என்ன?

உமர் அப்துல்லா, ராகுல், பிரியங்கா
28 வயதில் எம்.பி... 38 வயதில் காஷ்மீர் முதலமைச்சர்... யார் இந்த உமர் அப்துல்லா?

யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கு சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் உள்ளது என்பதால், விரைவில் முழு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என உமர் அப்துல்லா விரும்புகிறார். மாநில அந்தஸ்தைத் திரும்பப்பெற்ற பிறகு, சட்டப்பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த காஷ்மீரைச் சேர்ந்த கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்குச் சேவைசெய்ய எங்களுக்கு அதிகாரம் தேவை என புதிய முதலமைச்சர் உமர் அப்துல்லா குறிப்பிட்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாலர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். திமுக சார்பாக மக்களவை எம்பி கனிமொழி, சமாஜ்வாதி கட்சி சார்பாக எம்பி அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மற்றும் i-n-d-i-a கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதையும் படிக்க: வெடிகுண்டு மிரட்டல் | 48 மணி நேரத்தில் நிறுத்தப்பட்ட 8 விமானங்கள்.. சோதனையில் வெளிவந்த தகவல்!

உமர் அப்துல்லா, ராகுல், பிரியங்கா
ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அப்துல்லா யார்? அவர் கடந்து வந்த பாதை...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com