ஜம்மு - காஷ்மீர் முதற்கட்டத் தேர்தல்: 58.85 சதவீத வாக்குகள் பதிவு!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில், 58.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்எக்ஸ் தளம்
Published on

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் தேதி, சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக {செப்டம்பர் 18 (இன்று), 25 மற்றும் அக்டோபர் 1} தோ்தல் நடைபெறும் எனவும், இதன் முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் காஷ்மீரில் முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் இன்று (செப்.18) தோ்தல் நடைபெற்றது. இதில், 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஒட்டுமொத்தமாக, 23,27,580 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. முதற்கட்டமாக 3,276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 219 வேட்பாளா்கள் இத்தோ்தலில் களத்தில் நின்றனர். இதில் 90 போ் சுயேட்சை வேட்பாளா்கள். தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க: 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா.. புதிய அலை உருவாக வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள 24 தொகுதிகளில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை!

முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை குளிர் அதிகமாக இருப்பதாக சற்று மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 6 மணிக்கு நிறைவடைந்த முதல்கட்ட சட்டசபை தேர்தலின்போது யூனியன் பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக 58.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 77.23 சதவீதமும், தோடா வெஸ்ட் பகுதியில் 69.33 சதவீதமும், புல்வாமாவில் 43.87 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பின்னர், முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த தேர்தலில், காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. பிடிபி, பாரதிய ஜனதா, மக்கள் மாநாடு உள்ளிட்ட சில கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இதையும் படிக்க: லெபனான்: பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறியது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்! அமெரிக்கா சொல்வது என்ன?

ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் | தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு - பிரதமர் வைத்த கோரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com