ஜம்மு - காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுபெற்றுள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா
ஜம்மு-காஷ்மீர், ஹரியானாஎக்ஸ் தளம்
Published on

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டசபைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் 90 இடங்களுக்கான இந்தத் தேர்தல் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதுபோல், 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவிலும் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுபெற்றுள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ஹரியானா 

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புகள்

பாஜக 22-32

காங்கிரஸ் 50-64

மற்றவை 2-8

----------

நியூஸ் 24 - சாணக்யா

பாஜக 18-24

காங்கிரஸ் 55-62

மற்றவை 2-5

-----------

ரிபப்ளிக் டிவி

பாஜக 18-24

காங்கிரஸ் 55-62

மற்றவை 3-6

-----

பீப்பிள்ஸ் பல்ஸ்

பாஜக 20-32

காங்கிரஸ் 49-61

மற்றவை 3-5

-------------

துருவ் ரீசர்ச்

பாஜக 22-32

காங்கிரஸ் 50-64

மற்றவை 2-8

------------

ஜே.ஐ.எஸ்.டி.

பாஜக 29-37

காங்கிரஸ் 43-53

மற்றவை 4-6

இதையும் படிக்க: சிலமணி நேரத்தில் 600 பேர் கொன்றுகுவிப்பு.. ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகள் அட்டூழியம்! #ViralVideo

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.. தொடங்கியது ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

ஜம்மு - காஷ்மீர்

டானிக் பாஸ்கர்

பாஜக 20-25

என்.சி.-காங். 35-40

மற்றவை 12-16

-------

இந்தியா டுடே- சி வோட்டர்

பாஜக 27-32

என்.சி-காங்கி 40-48

மற்றவை 6-11

-----

பீப்பிள்ஸ் பல்ஸ்

பாஜக 23-27

என்.சி.-காங்கிரஸ் 46-50

மற்றவை 4-6

-----------

ஆக்சிஸ் மை இந்தியா

பாஜக 24-34

என்.சி.-காங்கிரஸ் 35-45

மற்றவை 8-23

இதையும் படிக்க: ’ஒரே அசிங்கமா போச்சு குமாரு..’ அபராத தொகையை வேறு அக்கவுண்ட்டுக்கு மாற்றி அனுப்பிய எலான் மஸ்க்!

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா
ஜம்மு-காஷ்மீர் | இறுதிக்கட்ட தேர்தல்.. 65.48 சதவிகிதம் வாக்குப்பதிவு - அரியணை யாருக்கு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com