ஜம்மு, காஷ்மீர் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகிறது.
370 வது சட்டப்பிரிவின் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து, காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்றதை அடுத்து, துணை நிலை ஆளுநர்கள் இருவருக்கும் காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, இன்று முதல் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக இயங்கும். இதனிடையே, இந்தியா வந்துள்ள 23 ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் ஜம்மு காஷ்மீரில் 2 நாள் பயணம் மேற்கொண்டனர். பின்னர் டெல்லி திரும்புகையில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறினர்