மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்.. பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளா அவை?

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையம் 5060 வாக்குப்பதிவு மையங்களை அமைத்துள்ளது.
முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்
முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்pt web
Published on

மூன்றாம் கட்ட தேர்தல்

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையம் 5060 வாக்குப்பதிவு மையங்களை அமைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது. வக்குப்பதிவை ஒட்டி தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி இன்று நடைபெறுகிறது என ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட வாக்காளர்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசிய ஏற்பாடுகளை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பணிபுரிந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்
அதிவேகமாக 100, 150, 200 ரன்கள்.. ENG, ஆஸி எல்லாம் 4வது, 5வது இடத்தில்! IND படைத்த 2 இமாலய சாதனைகள்!

40 தொகுதிகளுக்கு 415 வேட்பாளர்கள்

ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் பங்கு பெற தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 39.18 லட்சம். இதிலே 1.9 லட்சம் வாக்காளர்கள் 19 வயதுக்கு குறைவானவர்கள் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். 20 லட்சம் ஆண் வாக்காளர்கள் மற்றும் 19 லட்சம் பெண் வாக்காளர்கள் இறுதி கட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என அவர்கள் குறிப்பிட்டனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள 40 தொகுதிகளில் 415 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காஷ்மீர் பிராந்தியத்தில் பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திப்புரா ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு பிராந்தியத்தில் உதம்பூர், கத்துவா, ஜம்மு மற்றும் சாம்பா மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 40 சட்டமன்ற தொகுதிகளில் 24 ஜம்மு பிராந்தியத்தில் உள்ளன. மீதமுள்ள 16 தொகுதிகள் காஷ்மீர் பிராந்தியத்தில் அமைந்துள்ளன.

முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்
டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகள் + 3000 ரன்கள்.. உலகில் 2வது வீரராக ஜடேஜா படைத்த சாதனை!

பாஜகவிற்கு சாதகமாக 24 தொகுதிகள்

இந்த 40 தொகுதிகளும் ஏழு மாவட்டங்களில் அமைந்துள்ளன எனவும் கிட்டத்தட்ட 20,000 நபர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சியின் சஜாத் லோன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ரமன் பல்லா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் அடக்கம். நாளை ஜம்மு பிராந்தியத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என அந்த கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பல்வேறு தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது எனவும் 29 வாக்குப்பதிவு மையங்கள் எல்லை பகுதிக்கு அருகே அமைந்துள்ளன எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்களே வாக்குப்பதிவு நடத்தும் 50 மையங்கள், இளைஞர்கள் வாக்குப்பதிவு நடத்தும் 40 மையங்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு நடத்தும் 43 மையங்கள் மற்றும் 45 பசுமை வாக்குப்பதிவு மையங்கள் சிறப்பு ஏற்பாடாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

தேவையான பாதுகாப்பு தவிர, வாக்காளர்களை அதிக அளவில் பங்கேற்க அழைக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்
தமிழக அமைச்சரவை மாற்றம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை?

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே 50 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. முதல் கட்டமாக செப்டம்பர் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற 24 தொகுதிகளில் சராசரி வாக்குப்பதிவு 61.38 சதவீதமாக இருந்தது. இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற 26 தொகுதிகளில் சராசரி வாக்குப்பதிவு 57.31% பதிவானது. இந்நிலையில் இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் ஆரோக்கியமாக இருக்கும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் நம்பிக்கையுடன் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், தேசிய மகாநாடு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்
”செந்தில் பாலாஜி தியாகி என்றால் அவரிடம் ஏமாந்தவர்கள் யார்.?” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com