காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லபட்டார்.
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேடுதல் பணியும் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது, பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
முன்னதாக காஷ்மீர் அரசியல்வாதிகள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.