காஷ்மீரில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மெக்பூபா நேரில் ஆறுதல்

காஷ்மீரில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மெக்பூபா நேரில் ஆறுதல்
காஷ்மீரில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மெக்பூபா நேரில் ஆறுதல்
Published on

ஜம்மு காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மெஹ்பூபா நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர் காஷ்மீரில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். காஷ்மீரின் பர்காம் மாவட்டத்தில் நடந்த பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த கல்வீச்சில் திருமணி மற்றும் அவருடன் சென்ற 5 சுற்றுலா பயணிகளும் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் திருமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கல்வீச்சில் படுகாயமடைந்த திருமணி சிகிச்சைசை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞர் திருமணி உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, அவரது பெற்றோர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது திருமணியின் தந்தை மெகபூபாவிடம் கதறி அழுது தன்னுடைய வேதனையை தெரிவித்தார். ‘தனக்கு பின்னர் தன்னுடைய மகன் தான் இருப்பான் என்று நினைத்தேன். ஆனால், அவன் சென்றுவிட்டான். அவன் அதிகம் பேசமாட்டான். தொந்தரவும் கொடுக்க மாட்டான்’ என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com