டெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்?: வீடியோவால் பரபரப்பு

டெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்?: வீடியோவால் பரபரப்பு
டெல்லி ஜாமியா பல்கலை., நூலகத்தில் மாணவர்களை தாக்கிய போலீசார்?: வீடியோவால் பரபரப்பு
Published on

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்திற்குள் போலீஸ் உடையில் நுழைந்தவர்கள், அங்கிருப்பவர்களை தாக்குவது போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தது. அதன் ஒருபகுதியாக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டு வன்முறை வெடித்தது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். கல்லூரிக்குள் நுழைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். நூலகத்தில் நுழைந்த போலீசார், கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை தாக்கியதாக பல்கலைக்கழகம் குற்றம்சாட்டியது. இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

ஜாமியா நகரைச் சேர்ந்த முஜீபர் ரஹ்மான் என்பவரது மகன் சயான் முஜீப்பும் ஜாமியா பல்கலை.யில் மூன்றாம் ஆண்டு பிபிஏ படித்து வந்தார். அவரும் போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் சயானின் இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. மேலும் ஒரு மாணவர் தனது கண்ணை இழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், jamia coordination committee என்ற பெயரில் செயல்படும் ட்விட்டர் கணக்கு, கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி டெல்லி போலீசார் ஜாமியா பல்கலை., நூலகத்தில் நுழைந்து மாணவர்களை தாக்கியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை scroll.in என்ற இணையதளம் வெளியிட்டதோடு அதன் நம்பகத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குற்றப்பிரிவு சிறப்பு காவல் ஆணையர் பிரவீர் ரஞ்சன் கூறும்போது, “அந்த வீடியோ குறித்து இப்போதுதான் தெரியவந்துள்ளது. அதுகுறித்து விசாரணை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com