தகர்க்கப்பட்ட நவீனமயமான தீவிரவாதிகள் கட்டுப்பாட்டறை

தகர்க்கப்பட்ட நவீனமயமான தீவிரவாதிகள் கட்டுப்பாட்டறை

தகர்க்கப்பட்ட நவீனமயமான தீவிரவாதிகள் கட்டுப்பாட்டறை
Published on

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டறை மிகவும் நவீன வசதிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு இந்திய தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலகோட் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாதிகளிம் முகாம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பாலகோட் முகாம் 500 முதல் 700 பயங்கரவாதிகள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முகாமில் நீச்சல் குளம் வசதியும் மற்றும் சமையல் செய்யும் வசதிகளும் இருந்துள்ளது. மேலும் இம்முகாம் குன்ஹார் நதிக்கு அருகில் அமைந்திருந்ததால் பயங்கரவாதிகளுக்கு நீர்வாழ் பயிற்சி அளிக்க உதவும் விதமாக அமைந்திருந்தது. இதற்கு முன்னாள் இந்த முகாமை ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி கொண்டிருந்தது.

மேலும் பாலகோட் முகாம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாலகோட் முகாம் ஒசாமா பின் லாடன் பதங்கியிருந்த அபோத்தாபாத்திற்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com