கடத்தியவரிடமிருந்து பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை! ராஜஸ்தானில் ருசிகரம்.. நடந்தது என்ன? #Video

ராஜஸ்தானில் குழந்தையைக் கடத்தியவரிடமிருந்து அக்குழந்தை பிரிய மனமில்லாமல் அடம்பிடித்த அழுத சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
தனுஷ் சாஹர்
தனுஷ் சாஹர்எக்ஸ் தளம்
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்தில், 11 மாத ஆண் குழந்தை ஒன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை அந்தக் குழந்தையின் தாயார், கடந்த 14 மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தார். இதையடுத்து, அக்குழந்தையைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இதற்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சிறப்பு தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தேடி ஒருவழியாக குழந்தையை கடத்தியவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குழந்தையும் மீட்கப்பட்டது. ஆனால், அந்தக் குழந்தை அவரைப் பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. எனினும் வலுக்கட்டாயமாக குழந்தையை அவரிடமிருந்து பிரித்து தாயிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்விவகாரம் குறித்து ராஜஸ்தான் காவல் துறையினர், "விருந்தாவனத்தில் உள்ள யமுனை நதிக்கு அருகில் ஒரு குடிசை வீட்டில் துறவியாக வசித்து வந்த தனுஜ் சாஹர் என்பவர்தான் குழந்தையை கடத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இவர் அம்மாநிலத்தின் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் ஏட்டாக வேலை செய்துவந்தவர்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவல்துறையின் நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த அவர், மொபைல் போனை பயன்படுத்தாமலும் தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றியும் வந்துள்ளார். அதேபோல, அவர் ஒருவரை சந்தித்தால் மீண்டும் அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். மேலும் குழந்தையை கடத்தியபோது இருந்த அடையாளத்தை மறைக்க நீண்ட தாடி வளர்த்துள்ளார்.

இதையும் படிக்க: தலையில் தொடர்ந்து பந்து தாக்கி காயம்| ஆஸி. அதிரடி வீரர் 26 வயதிலேயே ஓய்வு?

தனுஷ் சாஹர்
டெல்லி | பச்சிளம் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை; CBI விசாரணையில் கடத்தல் கும்பல் அதிர்ச்சி தகவல்

அதேநேரம் கடத்தப்பட்ட பிருத்வியை தன்னுடைய சொந்த மகனாகக் கருதி பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். குழந்தையை கண்டுபிடித்து தன்னிடம் இருந்து போலீஸ் பறித்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளார். இதன் காரணமாக குழந்தையை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனுஜ் சாஹரை கைது செய்ய ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தனுஜ், அலிகார் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரை கைதுசெய்ய காவல் துறையினர் முன்வந்தனர்.

இதைக்கண்ட தனுஜ் ​​கடத்தப்பட்ட குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயற்சித்தார். அவரை 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற ராஜஸ்தான் தனிப்படை போலீசார் அவரைப் பிடித்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது கடத்திய தனுஜை பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுத அடம்பிடித்தது. அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்த தாயாரான பூனம் செளத்ரியை, தனுஜ் சாஹர் விரும்பியுள்ளார். மேலும் அவரை தன்னுடன் வைத்துக்கொள்ளவும் ஆசைப்பட்டுள்ளார். அதற்கு பூனம் செளத்ரி மறுத்துள்ளார். அவரை, தன்னுடைய ஆசைக்கு இணங்கவைப்பதற்காகவே, அவருடைய மகனை தனுஷ் சாஹர் தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தியுள்ளார்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கேப்டன்ஷிப் விவகாரம்|பேசாமல் இருந்த ரோகித் - ஹர்திக்.. இணைத்து வைத்த டிராவிட்.. சாத்தியமானது எப்படி?

தனுஷ் சாஹர்
சாலையோரத்தில் உறங்கிய 4 மாத பெண் குழந்தை கடத்தல்; சிசிடிவி காட்சிகளை வைத்துக் களமிறங்கிய போலீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com