மும்பை மாநகரில் இருக்கும் ஜெயின் கோயில் ஒன்று கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் 100 படுக்கை வசதிகளும், 10 மருத்துவர்களும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக இருப்பது மகாராஷ்ட்டிரா. அதிலும் மும்பை மாநகரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான் ஜெயின் கோயில் ஒன்று கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக மாறியிருக்கிறது.
இந்தக் கோயிலில் இப்போது 100 படுக்கை வசதிகளும், 50 மருத்துவ உதவியாளர்களும், 10 மருத்துவர்களும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டும் இந்த ஜெயின் கோயில் கொரோனா சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டது. கடந்தாண்டு மட்டும் இந்த மையத்தில் இருந்து 2000 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.