100 கோடியை விட்டுவிட்டு துறவறவம் செல்லும் தம்பதி!

100 கோடியை விட்டுவிட்டு துறவறவம் செல்லும் தம்பதி!
100 கோடியை விட்டுவிட்டு துறவறவம் செல்லும் தம்பதி!
Published on

ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் குழந்தையை விட்டுவிட்டு துறவறம் மேற்கொள்ள ஒரு தம்பதி முடிவு செய்துள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் என்ற பகுதியை சேர்ந்தவர் அசோக் சண்டாலியா. மாவட்ட முன்னாள் பாஜக தலைவர். இவர் மகள் அனாமிகா (34). மருமகன் சுமதி ரத்தோர் (35). இந்த தம்பதிக்கு இபயா என்ற 3 வயது குழந்தை உள்ளது. இவர்களுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன. 

ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்களான இந்த தம்பதி, குழந்தை மற்றும் சொத்துக்களை விட்டுவிட்டு துறவு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 
இதற்காக வரும் 23-ம் தேதி, சூரத்தில் ஜைன குரு, சுதமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் என்ற சாமியாரிடம் தீட்சை வாங்க இருக்கின்றனர். துறவறம் மேற்கொள்வதற்கான முதல் சடங்கு இது. இந்தச் சம்பவம் நீமுச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபற்றி சுமித்தின் அப்பா, ராஜேந்திர சிங் ரத்தோர் கூறும்போது, ‘இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக எடுப்பார்கள் என்று நினைக்கவில்லை’ என்றார். இவர் சிமென்ட் ஆலை உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

அனாமிகாவின் அப்பா அசோக் சாண்டில்யா கூறும்போது, ’அவர்களை சமாதனப்படுத்த முடியவில்லை. மதம் அழைக்கும்போது அவர்களை யாராலும் தடுக்க முடியாது. பேத்தியை நான் வளர்த்துக்கொள்வேன்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com