“இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேச்சு” - ராகுல் காந்தியை சாடும் ஜெகதீப் தன்கர்!

அரசியல் சாசனப் பதவி வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவிற்கு எதிராக பேசி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஜெகதீப் தன்கர், ராகுல்காந்தி
ஜெகதீப் தன்கர், ராகுல்காந்திpt web
Published on

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், வெளிநாட்டு மண்ணில் இந்தியாவிற்கு எதிராக பரப்பப்படும் கருத்துக்கள் வேதனை தருவதாகவும், இது சிந்தித்து ஆலோசிக்க வேண்டிய ஒன்று எனவும் கூறினார்.

அரசியல் சாசனப் பதவி வகிக்கும் ஒருவர் இடஒதுக்கீடுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

துணை குடியரசுத் தலைவரான ஜகதீப் தன்கர்
துணை குடியரசுத் தலைவரான ஜகதீப் தன்கர்

இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி என்பதை உணர வேண்டுமென கேட்டுக் கொண்ட ஜெகதீப் தன்கர், ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும், சமத்துவத்தை கொண்டு வருவதற்கும் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பில் சிறந்த அறத்துடன் இருப்பதாக கூறினார்.

ஜெகதீப் தன்கர், ராகுல்காந்தி
நடிகைகள் குறித்து ஆபாச, அவதூறு பேச்சு: காந்தராஜ், முக்தார் மீது நடிகை ரோகிணி புகாரின்பேரில் வழக்கு!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இந்தியாவின் அரசியல் களம், இடஒதுக்கீடு தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெகதீப் தன்கர், ராகுல்காந்தி
நெல்லை: தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் குளிக்கச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com