“இண்டர்நெட் மூலம் கருத்து தெரிவிப்பதும் அடிப்படை உரிமைதான்”- உச்சநீதிமன்றம்

“இண்டர்நெட் மூலம் கருத்து தெரிவிப்பதும் அடிப்படை உரிமைதான்”- உச்சநீதிமன்றம்

“இண்டர்நெட் மூலம் கருத்து தெரிவிப்பதும் அடிப்படை உரிமைதான்”- உச்சநீதிமன்றம்
Published on

ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‌

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. அன்று முதல் அப்பகுதியில் இணையசேவை துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்ததாகத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அமர்வு‌, அரசியல் சாசனப்பிரிவு 19-ன் படி இணையதளம் மூலம்‌ கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும் என்று கூறியதோடு தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் குறிப்பிட்டது. இணையதளம் உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்படும் தடை உத்தரவுகளை மத்திய அரசு மக்களுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் தகவல் தொ‌டர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com